விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த மாணவர் படித்த பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த பத்மா கனி என்ற 40 வயது ஆசிரியர் ஒருவருக்கும் இந்த மாணவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

ஆசிரியைக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த மாணவன் பிளஸ் டூ படித்த போது வீட்டு பாடங்களை சரிவர எழுதாமல் இருந்துள்ளார் .இதனால் அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடம் எழுத பத்மா கனி உதவி இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் ஆனது ஆசியையை வேறுபள்ளிக்கு மாற்றி உள்ளது.

ஆனால் அவர் அந்த பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரிக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் அங்கிருப்பதை அறிந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நான்கு நாட்களாக ஆசிரியை பத்மா கனியும், மாணவனும் ரூம்எடுத்து  தங்கி இருந்ததும் மாணவனை கல்லூரியில் சேர்க்க முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஆசிரியை பத்மாக்கனியை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.