ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை கொடூரமாக கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சமப்வ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு கணவரை கைது செய்துள்ளனர் . மேலும் மூடநம்பிக்கை காரணமாக இவ்வாறு கொலை செய்தாரோ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.