நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
மேலும், 9 தொகுதிகளில் 3ஆம் இடத்தையும், 3 தொகுதிகளில் 4ஆம் இடத்தையும் அதிமுக பிடித்துள்ளது. 20.47% வாக்குகள் பெற்ற அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
