நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்த தொகுதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
ஈரோட்டில் பாஜக கூட்டணி தாமாக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம், கன்னியாகுமரி தொகுதியில் பாமகவைப் பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம், நாகை தொகுதியில் பாஜகவை பின்னுக்கு தகுதி மூன்றாம் இடம், திருச்சியில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளியும், புதுச்சேரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியும் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக சிவகங்கையில் 1.63 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.
