தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இவர் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இதற்கிடையில் இவர் இருண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.அதில் ஹீரோயின் ஆக நடித்த ஆரம்பக்கட்டத்தில் தெலுங்கு நடிகர்கள் மீது ஈர்ப்பு இருந்தது. ஆனால் அது காதலா ஈர்ப்பா? என்று தெரியவில்லை. அதோடு அது நீண்ட காலமும் இருக்கவில்லை.
ஆனால் எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீதுதான் கிரஷ் இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ரொம்பவே பிடிக்கும். அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். பல நாட்கள் கனவு கண்டேன் ஆனால் அவர் மீது இருந்த ஈர்ப்பு திருமணம் வரை செல்லாது என்று புரிந்து கொண்டேன். அதேபோல ஒரு பாடகரை காதலித்தேன் போல அவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவு கண்டேன் .சில வருடங்களில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்து கொண்டேன். அதன்பிறகு இனி இதுவும் வேண்டாம் எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
