தமிழகத்தில் உள்ள 11,113 அரசு பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிக்கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது.