
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இன்று மாலை 6:00 மணிக்கு தலைவர் 171 படத்தின் டீசர் வெளியாகும் என பட குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இன்று மாலை படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.