தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கும் நிலையில் த்ரிஷா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் நிலையில் நடிகர் அஜித் 3 வேடங்களில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீ லீலா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் குண்டூர் காரம் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மேலும் நடன புயலான ஸ்ரீ லீலா அஜித் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.