
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொது மக்களுக்கு ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பதிவுகளை முறைப்படுத்தவும் அதன் மூலம் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் KYC அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்தது. இதற்காக ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பலமுறை அவகாசம் வழங்கப்படும் மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. இதனால் இந்த பணியை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி வரும் நாட்களில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி பரவி வருகின்றது. ஆனால் அது போன்ற உத்தரவுகள் எதுவும் இல்லை என்றும் KYC சரி பார்ப்பை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூட்டுறவு துறை விளக்கம் அளித்துள்ளது.