இந்தியாவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பாக 12 சதவீதமும் செலுத்தப்படுகின்றது. ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர் ஒரு வர் தான் முன்னால் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து விலகி புதிய நிறுவனத்திற்கு மாறும்போது தன்னுடைய பி எப் கணக்கை மாற்றுவதற்கு ஊழியர் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு வழிமுறைகளை பின்பற்றி ஊழியரின் இருப்பு தொகை புதிய கணக்குக்கு மாற்றம் செய்யப்படும்.

ஆனால் தற்போது புதிய நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து ஊழியர் பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும்போது அவருடைய இருப்பு தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாறிவிடும். இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அவளுக்கு வந்துள்ளது. இதனால் பிஎஃப் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.