சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ் தோனி பேட்டிங்கில் 8-வது மற்றும் கடைசி வரிசையில் களமிறங்குவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதிலும் அவருடைய பேட்டிங் தரவரிசை கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நாம் தோனியின் பேட்டிங் தரவரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியும். அது அவருடைய விருப்பம். நான் எப்போதும் தோனியின் பேட்டிங் குறித்து விவாதிக்க மாட்டேன். அவர் எங்கு பேட்டிங் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். அவர் நன்றாக பேட்டிங் செய்வதோடு ரசிகர்களை மகிழ்விக்கிறார். சிஎஸ்கே வெற்றி பெற்றால் என்ன? தோல்வியடைந்தால் என்ன? யாருக்கும் அதைப் பற்றி கவலை இல்லை. மேலும் அவர் ரசிகர்களை மகிழ்கிறார் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.