நியூயார்க்கில் இன்று நடைபெறும் டி20 WC லீக் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், நாக் அவுட் போட்டிகளில் – தங்கள் வெற்றிக்கோட்டையை கடக்கவில்லை என்பது உண்மைதான் என்றும், இந்த முறை உலக கோப்பையை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாகவும் தங்களது அனுபவம் அதற்கு உதவும் எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.
