இந்தியாவில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏப்ரல் 4 முதல் 9ஆம் தேதி வரை JEE மெயின் தாள் 1 தேர்வுகள் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12ஆம் தேதி JEE main தாள் 2எ, 2பி B.Arch மற்றும் B.Plan தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் NIFT சூழ்நிலை சோதனை தேர்வு நடைபெறும்.

ஏப்ரல் 25 JEE mains தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

மே 5 நீட் தேர்வு, மே 11 NCHM ஜேஇஇ தேர்வு, மே 12 FDDI மற்றும் ISI தேர்வு, மே 15 முதல் மே 31 வரை CUET தேர்வு, மே 19 CMI தேர்வு, மே 26 ஜேஇஇ தேர்வு, ஜூன் 1 NATA தேர்வு, ஜூன் 6 JIPMAT தேர்வு, ஜூன் 8 IMU CET மற்றும் AIIMS நர்ஸ் தேர்வு , ஜூன் 9 IISER IAT தேர்வு முடிவுகள், ஜூன் 10 IIT மற்றும் NIT JOSSA கலந்தாய்வு தொடக்கம், ஜூன் 14 நீட் முடிவுகள், ஜூன் 15 மற்றும் ஜூன் 16 NFAT தேர்வு, ஜூன் 22 AIIMS பாராமெடிகல் தேர்வு, ஜூன் 30 CUET தேர்வு முடிவுகள் வெளியாகும்