
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதாவது மார்ச் 31 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்பதால் மதிய வேலைகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.