கர்நாடக மாநிலம் ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவருடைய மகள் தீபாவுக்கும் (21) உறவு முறை தாய் மாமன் மால் தேஷ்(35) என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் தீபா திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மால் தேஷிடன் கூறியுள்ளார்.

ஆனால் அவர் என்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என தீபாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் தீபா தூக்கில் சடலமாக தூங்கினார். முதலில் தற்கொலை என்று குடும்பத்தினர் நினைத்த நிலையில் அதன் பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் மால்தேஷ் தீபா வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகிறார்.