நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுவர்களில் போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ஆணைய வித்தரைய நடவடிக்கையை எடுத்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.