
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய் சொன்ன ஸ்டேட்மெண்ட் படி பார்த்தால் இரண்டு கட்சிக்கு தான் சரியா பொருந்தும். ஒன்று திமுகவுக்கு பொருந்தும். இன்னொன்னு பிஜேபிக்கு பொருந்தும். இது கூட உங்களுக்கு தெரியலையா உங்களுக்கு…. நாங்க ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அதே நேரத்துல பாத்தீங்கன்னா…. பொய் வழக்கு, ஊழல் வழக்கு போடுவாங்க.
எல்லாத்தையுமே நீதிமன்றத்தில் சந்தித்து, அதன் அடிப்படையில் நிரபராதின்னு சொல்லிட்டு, எல்லா விதமான அளவுக்கு நான் நடவடிக்கைகள் இருக்கிறது. விஜய் எங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் எங்கள் கட்சியை பற்றி குறிப்பிட்டு சொன்னால், அதற்குரிய பதிலடியை நிச்சயமாக நாங்கள் கொடுப்போம். நாங்கள் திமுக பிஜேபி தான் அவர் தாக்கினார் திமுக தான் ஊழலில் தளைத்துள்ளது. திமுக – பிஜேபியை தான் விஜய் சொல்லி உள்ளார்.
திமுக தானே ஊழலில் திளைத்துள்ளது. இன்றைக்கு கிட்டத்தட்ட 30,000 கோடி என்ன செய்யன்னு தெரியாம வச்சிக்கிட்டு தவிக்கிறார்கள் என்று யார் சொன்னது ? DMK அரசில் கூட இருந்த முன்னாள் பைனான்ஸ் மினிஸ்டர். இப்போது தகவல் தொழில் அமைச்சரா அவரு… அவரே ஸ்டேட்மென்ட் கொடுத்து,
எங்கும் – எதிலும் தமிழ் பேய், எங்கும் – எதிலும் ஊழல் என்ற அடிப்படையில் திமுக உடைய கொள்கையாகவும், அதே மாதிரி கோஷமாகவும், அதான் முழக்கமாக இருக்கிறது. அதை மைண்ட்ல வச்சு தான் அவர் சொல்லி இருக்கிறார். அதனால விஜய் எங்களை குறிப்பிட்டு சொல்லாதவரையில், நாங்கள் ஏன் அதுக்கு போய் கருத்து சொல்லணும் ? விஜய் சொன்னது கருத்து இரண்டு கட்சிக்கு தான். ஒன்னு பிஜேபி, இன்னு ஒன்னு திமுக என பேசினார்.