
ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணியிடம் 1.8 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்ற 51 வயது நபர் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐ ஆர் சி டி சி மூலமாக முன்பதிவு பயண சீட்டை ரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து இணையத்தில் பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை அவர் திரும்ப கேட்ட நிலையில் அப்போது வங்கி கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடத்தில் 1.8 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த உதவி எண் ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் ஐ ஆர் சி டி சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.