கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரம்மாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். மாவட்டம் முதல் ஒன்றியம் வரை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். பிரம்மாண்ட மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி மற்றும் மாவட்ட செயலாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.