அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், அமலாக்க துறையை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான,  இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவர் தான் முதல்வர். அமலாக்கத்துறை கைதுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தமது கைது என்பது பல்வேறு விதிகளை  மீறி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, போதுமான எவிடன்ஸ்கள் எதுவுமே இல்லாமல் நடத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதாக இது இருக்கின்றது. தேர்தல் சமயத்தில் இத்தகைய கைது என்பது தனது அரசியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற பல்வேறு  விஷயங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  எம் எம் சுந்தரேஷ்  ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

ஹேமந்த் சோரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு முதல்வரை கைது செய்ய இவர்கள் வந்திருக்கிறார்கள். எனவே இதனை விசாரிக்க வேண்டும் என்ற வாதங்களை முன்வைத்தார். இதற்க்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீங்கள் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது ? ஏனென்றால் ஒரு வழக்கிற்காக நாங்கள் உங்களை  அனுமதிக்கிறோம். என்றால் இதே விஷயத்திற்கு எல்லோரும் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு வர தொடங்கி விடுவார்கள்.

சுப்ரீம் கோர்ட் போலவே தான் ஹைகோர்ட்டுகளும்  அரசியல் சாசன நீதிமன்றங்கள். எனவே நீங்கள் அங்கு நேரடியாக சென்று ஒரு முறையிடலாம்  என்ற ஒரு விஷயத்தை கூறினார். ஹேமந்த் சோரன்  தொடர்ந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெறவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.