விடுதலை புலிகள்  அமைப்புக்கு சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக கூறி NIA அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகிறார்கள். அதற்கு நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. திடீரென்று இந்த சோதனையில் NIA  ஈடுபட்டு இருக்கிறார்கள். சம்மனுக்கு பதில் அளிக்க அவகாசம் தராமல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அனுப்பப்பட்டுள்ள  சம்மனுக்கு அவகாசம் வழங்கைவிட்டு, அதன் பிறகு சந்தேகம் இருந்தால் சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கோரிக்கை தொடர்பாக புதிய மனுவை  தாக்கல் செய்ய  இருப்பதாகவும், அதை அவசர வழக்காக இன்றைய தினம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.  இந்த மனு தாக்கல்செய்யும்  நடைமுறையில் நாம் தமிழர் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த வழக்கில் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் ? என்ன மாதிரியான நிவாரணம் கேட்கிறார்கள் ? என முழுமையாக தெரியும்.