
புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துவதுடன் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் இரும்பு தகடுகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக தரைதளத்தில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.