விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார், வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், தேமுதிக சொந்தங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், யூடியூப் சேனல்களை சேர்ந்த சகோதரர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2 தினங்களுக்கு முன்பு நான் இதேபோல ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். கேப்டன் நன்றாக இருக்கிறார், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.

ஆனாலும் தொடர்ந்து டிரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டதாகவும், கேப்டனை வெண்டிலெட்டரில் வைத்துள்ளதாகவும், செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும், முதலமைச்சர் அவர்கள் கேப்டனை சந்தித்து ஆறுதல் சொன்னது போன்ற தொடர்ந்து அனைத்தும் பொய்யான தகவல்களை நீங்க தொடர்ந்து, யூடியூப் சேனல்களிலும், சேனல்களிலும்  போடுறீங்க. ஒட்டு மொத்தமாக தொண்டர்கள், நிர்வாகிகள், உறவினர்கள், திரையுலகினரையும், எங்கள் குடும்பத்தாரையும் எங்கள் மிகப்பெரிய ஒரு மன உளைச்சலுக்கு வதந்தி செய்திகள், பொய் செய்திகள் கொண்டு செல்கிறது.

இங்க கேப்டன் கூடவே நாங்கள் இருக்கிறோம், மருத்துவமனைக்குள் அமைதியாக எந்த விதமான ஒரு பரபரப்பு இல்லாமல் நல்லபடியாக இருக்கோம். ஆனா அந்த பரபரப்புகளும், வதந்திகள் அத்தனையுமே வெளியில் உலாவிகிட்டு இருக்கிறது. தயவு செய்து மனிதநேயத்தோடு வதந்திகளை பரப்புவது யாராக இருந்தாலும் தயவு செய்து நிறுத்தி விடுங்கள். கேப்டன் நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகுவிரைவில் கேப்டன் வீடு திரும்ப இருக்கிறார்.

நிச்சயம் வந்து அனைவரையும் சந்தித்க்க இருக்கிறார் என தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் வீண் வதந்திகளை, பரப்புபவர்களை யாரும் நம்பாதீங்க என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இன்று நானும் எனது இரண்டாவது மகன் சண்முக பாண்டியனும், கேப்டனை சந்தித்த புகைப்படத்தை கூட உங்களுக்காக போட்டிருக்கிறோம். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம், யாரும் நம்ப வேண்டாம் என்பதை மீண்டும் எல்லோரையும் பார்த்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார்.