செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டத்தில் நான்கு தொகுதி பயன்பெறும் விதமாக வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்புகின்ற திட்டத்தை அண்ணா திமுக ஆட்சியில் சுமார் 568 கோடி ரூபாயில் திட்டத்தை துவக்கி, முதல் கட்டமாக ஒரு ஆறு ஏரிகள் நீர் நிரப்புகின்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டே நான் துவக்கி வைத்தேன். அதற்கு பிறகு கிடப்பில் போட்டுட்டாங்க.

இன்னும் அந்த பனி நிறைவேற்ற வில்லை.  அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே இன்றைய முதலமைச்சர் விடியா திமுக ஆட்சியினுடைய….. திராவிட ஆட்சி… திராவிட மாடல்  ஆட்சியில்  கிடப்பில் இருப்பதுதான் எதார்த்த உண்மை. அதுமட்டுமல்ல நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என சொல்லுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில்.. 520 அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார். அதில் 100% நிறைவேற்றப்பட்டதா சொல்லுகிறார்கள்..  எங்கங்க 100% நிறைவேற்றி இருக்காங்க… எல்லாம் பச்சை பொய். கூட்டுறவு நியாய விலை ரேஷன் கடையில் சர்க்கரை 2 கிலோ கொடுப்பேன்னு  சொன்னார்கள்,  கொடுத்தார்களா ? முதியோர்வுகளுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார்கள்,  கொடுக்கவில்லை என தெரிவித்தார்.