
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, இப்ப போய் பாரத் என சொல்லுவது…. இந்தியா என்பதை மாற்றி பாரத் என மாற்றுவது தேவையற்ற செயல். அது இந்தியா கூட்டணியை பார்த்து அவர்களை மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு.
உதாரணதுக்கு திருச்சி BHEL (Bharat Heavy Electricals Limited) பாரத் என்ற வார்த்தை இருக்கு. Bharat Sanchar Nigam Limited – BSNL அப்படின்னு இருக்கு. இதெல்லாம் உண்மையில் மத்திய அரசு நிறுவனமா என பாரத் என்ற பெயர் இருப்பதால் இன்று நிறைய பேருக்கு தெரியாது. இன்றைக்கு மத்திய அரசினுடைய வாகனங்களில் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா, இந்திய அரசு.
ரூபாய் நோட்டில் கூட இந்தியன் ரூபிஸ் அப்படின்னுதான் இருக்கிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்று இருக்கிறது. இந்தியன் போலீஸ் சர்வீஸ், இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ், இந்தியன் ஃபாரின் சர்வீஸ் என எல்லாவற்றிலும் இந்தியா என்ற பெயர்தான் இருக்கிறது. எவ்வளவு பெயரில் இதை மாற்றி கொண்டு வருவது ஒரு அவசியமற்ற செயல்.
இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. சொந்த நாட்டினுடைய பெயரை பார்த்து பிரதமர் உள்ளிட்ட ஆளும் கட்சியை பயப்படுவது, உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காது. இந்தியா என்ற நாட்டின் பெயரை பார்த்துக் கொண்டு, இந்திய பிரதமரே பயப்படுகிறார்கள் என்றால், இது உண்மையிலேயே அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷயம் தான்.
அதனால் பாரத் என்பது… இந்தியா என்பது… இப்ப இருக்கின்ற மாதிரி அப்படியே இருந்து கொண்டு போகட்டும். இந்தியா என்று சொல்லிக் கொள்வதில் எல்லோரும் பெருமை கொள்கின்றோம். பாஸ்வேர்ட்டில் இந்தியன் தான் இருக்கும். நீ எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டால் இந்தியன் என்று தான் சொல்வோம். யாரும் பாரத் என்று சொல்ல மாட்டோம். அதனால் மத்திய அரசு பாட திட்டத்தில் NCERTயில் இப்படி செய்யப்பட்ட மாற்றம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, அது தேவையற்றது.