நடிகை திரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை விசாரணைக்காக அழைத்து இருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக ஆஜரான நிலையில் இன்று காலையில் இது குறித்து கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக,  மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது நடிகர் திரிஷா அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் தவறு செய்பவன் மனிதன,  மன்னிப்பவன் தேவன் என்ற ஒரு பொருள் படும்படியாக ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய நடிகர் திரிஷாவுக்கு நீங்கள் மன்சூர் கானுக்கு மன்னிப்பு கொடுத்தது நல்ல ஒரு விஷயம் என்று ரசிகர்களும் தற்போது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் .