
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், கொரோனா மாதிரி ஒரு பேரிடர் வந்தால் ? வட மாநிலங்களில் மக்கள் எப்படி கொத்து கொத்தாக மாண்டார்களோ, அது மாதிரி நாமும் செத்து மடியும் நிலை ஏற்படும் என்ற ஒரு அபாயம் இருக்கிறது. அதற்காகத் தான் நீட்டை எதிர்த்து சண்டை போட்டு இருக்கிறோம்
தனிப்பட்ட வேற என்ன பிரச்சினை இருக்கு… இப்போ அரசியல் ரீதியாக வேற காரணமா என கேக்குறாங்க… எந்த அரசியலும் காரணமும் இல்ல. எனக்கு தெரிஞ்சு சம காலத்தில் நான் சொல்றேன். இப்படி ஒரு தலைவர்…. எந்த அரசியல் கட்சியிலும் சொன்னதில்லை.
உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் அருமைச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அங்கே ஒன்று சொன்னார்… சமகாலத்தில் எந்த அரசியல் தலைவரும் அப்படி சொன்னதில்லை. அஇஅதிமுக அவர்களுக்கு அழைப்பு கொடுதார்.நீங்கள் வாங்க. நான் உங்களோடு வாறேன்.
நாம் எல்லாம் டெல்லிக்கு போவோம். டெல்லியில் ஒக்காந்து போராடுவோம்… ஒன்றுபட்டு போராடுவோம். நீட் விலக்கை பெற்றுட்டு வருவோம். வந்த பிறகு அதன் முழு வெற்றியையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்… அதில் எங்களுக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று சொன்னவர் உதயநிதி ஸ்டாலின். யாரு சொல்லுவா இன்னைக்கு ? என செந்தில் கேள்வி எழுப்பினார்.