தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களுக்கான தகவல்களை துல்லிய சேகரிப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு வரும் நிலையில் துள்ளியமான புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இதனால் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை, திருச்சி, தர்மபுரி, கடலூர் மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட உள்ளது.

அதன் பிறகு இரண்டாம் கட்ட பணிகள் நடத்தப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு உலக வங்கி தமிழக அரசியற்கை நிதி உதவி அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தொடங்க உள்ள கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளின் பெயர், வயது மற்றும் கல்வித் தகுதி போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும் எனவும் இந்த பணிகளில் தமிழக பெண்கள் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த 600 பெண் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.