புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு தனது வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னரசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.