
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பழைய கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அனுமதி வழங்கியுள்ளது . அதன்படி SSLC படித்த அரசு ஊழியர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் பத்தாயிரம் அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கு முன்பு அரசு பணியாளர்கள் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அரசு ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இதனால் தற்போது பழைய கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் படிப்படியாக தங்களது கல்வி தகுதியை உயர்த்திக் கொள்ளும்படியும் அடுத்த ஆண்டுகளில் கல்வி தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.