நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்த பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்க மதிப்பீடு தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் நான் முதல்வன் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.