
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களையும், எட்டு கோடி தமிழ் உள்ளங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை வணங்கி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கழகத்தினுடைய அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்களே…
இந்த நிகழ்ச்சியிலே உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் கேபி முனுசாமி அவர்களே… கழகப் பொருளாளர் அண்ணன் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்களே… கழகப் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதர் அவர்களே… கழக தலைமை கழக செயலாளர் எஸ்.பி வேலுமணி அவர்களே மற்றும் இந்த வீர வரலாற்று எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற மூத்த தலைமை கழகத்தின் நிர்வாகிகளே…
இந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிற மாவட்டக் கழக செயலாளர் அவர்களே -நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே -முன்னாள் அமைச்சர் பெருமக்களே – முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே – கழக முன்னோடி பொறுப்பாளர்களே – கழகத்தினுடைய ஒன்றிய செயலாளர் – நகரக் கழக செயலாளர் – பேரூர் கழக செயலாளர் – பகுதி கழக செயலாளர்களே..
வார்டு கழக செயலாளர்களே – கிளை கழகத்தின் செயலாளர் அவர்களே – பொதுக்குழு உறுப்பினர்களே – செயற்குழு உறுப்பினர்களே வருகை தந்து சிறப்பித்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளே மற்றும் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்ற நிர்வாகிகளே… பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே…
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவுடைய உண்மை விசுவாச மிக்க தொண்டர்களே… இந்த அற்புதமான மாநாட்டை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஊடக நண்பர்களே…. பத்திரிக்கை நண்பர்களே… அதோடு எனக்கு உங்களுடைய ஆசியோடு சமய தலைவர்கள் இந்த வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டிலே புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை வழங்கிய சபை பெரியோர்களுக்கும்,
முன்னோடி பொறுப்பாளர்களுக்கும் வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிற அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என MGR, ஜெயலலிதா தொடங்கி அதிமுகவின் கடைநிலை அளவில் பொறுப்பில் இருப்பவர்களை சொல்லி எடப்பாடி பழனிசாமி உரையை தொடங்கினார்.