
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே சமீப காலமாக போலி மருந்துகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 136 மருந்துகள் ஆய்வுக் உட்படுத்தப்பட்டன.
அதில் கிருமி தொற்று, காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தக்கூடிய சுமார் 51 மருந்துகள் தர மற்றவையாக கண்டறியப்பட்டது. அதனுடன் மூன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்ட நிலையில் அவற்றின் விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.