சந்திரயான் 3 விண்கலம் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04-க்கு திட்டமிட்டபடி தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை அங்கிருந்து பார்வையிடுகிறார். இதன் நேரடி ஒளிபரப்பு மாலை 5.20 மணிக்கு இஸ்ரோ இணையதளம், யூடியூப் சேனல், டிடி நேஷனல் ஆகியவற்றில் தொடங்கும்.