
செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழ்நாடு முழுவதும்… எல்லா மாவட்டங்களில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் – தங்களுடைய குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருகை தர இருக்கின்ற நிலையில், இந்த வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு…
இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில்…. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த மாநாடு போல எந்த காலங்களிலும்…. கடந்த காலங்களிலும் சரி, யாரும் நடத்தியது இல்லை… ஆனால் எதிர்காலத்திலும் கூட மாநாடு நடத்தினால் ? அனைத்ந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இது போன்ற வீர வரலாற்றின் வெற்றி மாநாட்டை முறியடிக்கின்ற வகையில் எங்களுடைய மாநாடு தான் நிச்சயம் அமையும்.
அந்த வகையில் இன்றைக்கு குடும்பத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள், மதுரை நோக்கி படையெடுக்கின்ற சூழ்நிலை…. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் All roads lead to Rome என்று சொல்வார்கள். அதே போல எல்லா சாலைகளும் ரோம் நோக்கி செல்கின்றதை போல.. எல்லா சாலைகளும் இன்றைக்கு மதுரையை நோக்கி என்கின்ற வகையில்…. எழுச்சியோடு இருக்கின்றது.
நீங்கள் பார்க்கிறீர்கள்… கிட்டத்தட்ட அவ்வளவு எழுச்சி இன்றைக்கு இருக்கு. சென்னை மாவட்டம், அதே போல தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலிருந்து இன்றைக்கு பொதுமக்களும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும் சரி…. ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அம்மா மறைவுக்கு பிறகு கட்சி உடைச்சிது, கட்சி சிதறி போனது, அதற்கு பிறகு கட்சி இல்லை என சொன்னவர்களுக்கெல்லாம் பேரிடியாக இந்த மாநாடு அமைகின்ற வகையில்….. ஒரு எழுச்சியாக அண்ணன் எடப்பாடி தலைமையிலே…. கழகப் பொதுச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.