ஒடிசா மாநிலம் ராய்ஹை பகுதியில் கட்டிட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு கலவை இயந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு வெளியே சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா அந்த நபரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.
இதன்பிறகு இருவரும் காவல் நிலையம் சென்று சரணடைந்தனர். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
