தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை அவரது வீட்டில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் திருப்பணிநத்தம் அருகே உள்ள அவரது வீட்டில், இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து காயமுற்றுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது ஓய்வில் உள்ள அவர், நலமாக உள்ளாராம்.