இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஆமை ஒன்று முதலையின் வாயில் சிக்கிக் கொள்கிறது.

அங்கும் இங்கும் அசையும் ஆமையால் முதலையின் வாயிலிருந்து வெளியில் வர முடியவில்லை. இருந்தாலும் தனது முயற்சியால் முதலையின் வாயில அகப்படாமல் வெளியில் வந்து ஆமை ஆற்றை அடைந்துள்ளது. இதனை பார்க்கும் ஒரு நிமிடம் பரபரப்பாக உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் எவ்வளவு பெரிய பிடியாக இருந்தாலும் முயற்சி செய்தால் முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் எனவும் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.