தமிழகத்தில் கலை திருவிழாவில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கசெய்யும் விதமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடனம், நாட்டுப்புற கலை, இசை, காட்சி கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டமாகிய ஐந்து கலை வடிவங்களில் பயிற்சி வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் கலை ஆசிரியர்களை பயன்படுத்தி இந்த பயிற்சி நடைபெற உள்ள நிலையில் வாரந்தோறும் இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
