
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி :திமுக ஃபைல்ஸ்” முதல் பாகம் வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. அது திமுக கட்சியிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என்றும் அதில், புதிய அமைச்சர்கள் குறித்த விவரங்கள்தான் அதிகம் உள்ளன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களும், 300-க்கும் மேற்பட்ட பினாமிகளின் விவரங்களும் திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தில் உள்ளன. அதை பொது வெளியில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் அளிப்பதா என யோசித்து வருகிறேன்” என்று அண்ணாமலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.