நான் அரசியல் வருவது உறுதி, எந்த கட்சி எனக்கு அங்கீகாரம், தருகிறதோ அந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நானாக எந்த கட்சிக்கும் போக மாட்டேன். என்னை அழைத்தால் அந்த கட்சிக்கு கண்டிப்பாக போவேன் என கூறிய அவர், திமுகவில் பெண் கவுன்சிலர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை பணி செய்ய விடாமல் கணவர்கள், கவுன்சிலர்கள் போல் செயல்பட்டால் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.