முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தலைமைச் செயலகம் உழைக்கும் முதன்மை செயலகமாக மாறி இருக்கிறது. திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

அதே நேரம் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தனிகவனம் செலுத்த வேண்டும். திட்ட பணிகளை துரிதமாகவும், தரமாகவும் நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம் என அவர் தெரிவித்தார்.