அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்று பந்து வீச்சை செய்த சிஎஸ்கே விற்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மிரட்டலாக விளையாடி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை சென்னை அணிக்கு கொடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது முதல் ஓவரில் மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய CSK மிரட்டலான பங்களிப்பை கொடுத்து இறுதி நிமிடங்களில் ரவீந்திரநாத் சடேஜாவின் ஆட்டத்தினால் சென்னை அணி திரில்லான வெற்றியை பெற்றது. அதன்படி தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இயக்குனர் விக்னேஷ் சிவன், வரலக்ஷ்மி சரத் குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மைதானத்தில் போட்டியை நேரில் பார்த்து கொண்டாடினர். இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் சென்னை அணி வெற்றிக்காகவும், தோனிக்காகவும் விரைவாக தரமான பாடல் ஒன்றை பதிவு செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
C S K !!! #IPLFinals #MSDhoni? pic.twitter.com/9d9kxGpT7H
— Santhosh Narayanan (@Music_Santhosh) May 29, 2023
