ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அவர் இயக்கி நடித்த ராக்கெட்டரி திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மாதவன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் மாதவன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ராக்கெட்டரி திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்க ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.