உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்கூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்றைய ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிசை பகுதியான அங்கு ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ பல வீடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
