இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை செய்திருக்கிறது. இதன் வாயிலாக குழந்தைகளின் பயணம் ஈஸியாகவும் வசதியாகவும் உள்ளது. சில காலத்திற்கு முன் ரயிலில் குழந்தை பிறக்கும் வசதியானது சோதனை முறையில் துவங்கப்பட்டது.

இந்த புது மாற்றத்தின் விளைவாக ஒரு புதிய வடிவமைப்பு (பேபி பர்த் நியூ டிசைன்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புது வடிவமைப்பு முன்பை விட பாதுகாப்பானது மற்றும் வசதியானது ஆகும். ரயில்களில் பிரசவம் நடப்பது குறித்த 2-வது சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதுவாக ரயிலில் குழந்தையோடு பயணம் மேற்கொள்ளும்போதும் பெண்கள் மற்றும் குழந்தைக்கு போதுமான இடம் இல்லாமல் இருந்ததும் பெரிய பிரச்னையாகவே இருந்தது. தற்போது இப்பிரச்சனைகளை மனதில் வைத்துதான் இந்திய ரயில்வே நிர்வாகம் குழந்தை பிறப்புக்கான வசதியை ரயிலில் உருவாக்கி உள்ளது.