மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரேஷன் அட்டைகளிலிருந்து அவர்களின் பெயர்களை அரசு நீக்கி வருகிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை நீக்கும் பணியில் உத்தரப்பிரதேச அரசானது ஈடுபட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவின் படி தகுதியில்லாதவர்களின் பெயர்களை நீக்கி, தகுதியானவர்களின் பெயர்களை ரேஷன் கார்டு பட்டியலில் அரசு சேர்க்கும். தேசிய உணவுப் பாதுகாப்பு புதிய பட்டியலில் ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் மக்கள் தொகை அடிப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு நகரங்களில் எண்ணிக்கை இரட்டிப்பாக இருந்தாலும், குறைந்த விலையில் அனைத்து மக்களுக்கும் ரேஷன் பலனை அரசாங்கம் வழங்கும்.