
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணி அளவில் பைக் டாக்ஸி சவாரிக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிற்கு செல்ல இருந்ததால் பைக் சவாரிக்கு பதிவு செய்த நிலையில் அவர் பதிவு செய்த பைக் வர அவரை ஏற்றி கொண்டு ஓடிபி எண்ணை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி குறித்த பெண்ணின் போனை பறித்துக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அந்த நபர் இருந்துள்ளார். இறங்கும்போது போனை வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து அவரும் பைக்கில் பயணம் செய்துள்ளார்.
அப்போது குறித்த ஓட்டுனர் வண்டியை எதிர் திசையை நோக்கி செலுத்தி அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார். இதனால் பதறிப் போன அந்தப் பெண் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு உடம்பில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது ஓடும் பைக்கில் இருந்து அந்தப் பெண் குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2
— ANI (@ANI) April 26, 2023