இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதன் எஃப்ஐஆர் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று உங்களுடைய கிரெடிட் கார்டில் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகள் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு தொலைந்த பிறகு முதலில் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்க வேண்டும். உங்கள் அழைப்பு இணைக்கப்பட்டதும் வாடிக்கையாளர் பிரதிநிதி உங்கள் விவரங்களை கேட்பார். அதன் பிறகு உங்கள் கிரெடிட் கார்டை பிளாக் செய்து விடுவார். சில வங்கிகள் எஸ்எம்எஸ் மூலம் கிரெடிட் கார்டு பிளாக் செய்ய அனுமதிக்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதை மறக்க கூடாது. அனைத்து வகைகளிலும் மொபைல் ஆப் இருப்பதால் அதை பயன்படுத்தி கூட கிரெடிட் கார்டை பிளாக் செய்யலாம்.

இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று உங்கள் கிரெடிட் கார்டு பிளாக் செய்வதற்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம். மேலும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் தனி தனி பின் நம்பரை பயன்படுத்த வேண்டும். உங்கள் பின் நம்பரை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.‌ ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொதுக் கணினிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

உங்களுடைய தனிப்பட்ட கணினியின் உரிமம் பெற்ற ஆண்டிவைரஸ் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு https பயன்படுத்தும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் சேமிக்க வேண்டாம். மேலும் உங்களிடம் சரியான தொகை வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.