இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச் மாதம் வரை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த சேமிப்பு கணக்கில் பெண்கள் அல்லது சிறுமிகள் பெயரில் கணக்கு தொடங்கி 2 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு வருடத்திற்கு 7.5% வட்டி கிடைக்கும்.

நீங்கள் பணத்தை டெபாசிட் செய்த தேதியில் இருந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பிறகு உங்கள் கணக்கு முதிர்ச்சி அடையும். இந்நிலையில் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் கணக்கினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கியுள்ளார். இவர் பார்லிமென்ட் தெருவில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸில் பொதுமக்கள் போன்ற வரிசையில் நின்று புதிய கணக்கினை தொடங்கினார். கணினி மூலம் உருவாக்கப்பட்ட பாஸ் புக் அவரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் கணக்கு தொடங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மத்திய அரசின் இந்தத் திட்டத்தை பெண்கள் அனைவரும் கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.